வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Friday, 20 July 2012

வாழ்க வளமுடன்


எல்லா பேறுகளையும், உங்களுடைய வாழ்க்கையிலே பெற்று சிறப்பாக வாழ வேண்டும் என பிறரை "வாழ்க வளமுடன்' என்று வாழ்த்துவது மிக உயர்ந்த பலனை அளிக்கும். ஒரு செடியைப் பார்த்துக்கூட வாழ்த்தி மகிழலாம். அவ்வாறு வாழ்த்தும் போது, அச்செடியின் பலவீனம் நீங்கி நன்கு வளரும். அன்பு, அருள், இன்முகம், களை இவற்றோடு கூடிய உருவப்படங்களை வீட்டில் மாட்டி வையுங்கள். இதனால், குடும்பத்தில் அமைதியும் இன்பமும் நிலவும். குழந்தைகளும் நல்லவர்களாக, அழகு மிக்கவர் களாக திகழ்வார்கள். தனிமனிதன் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டுமானால் உலக மனித சமுதாயம் முழுவதுமே அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும். ஒவ்வொருவரும் காலையில் எழுந்தவுடன் உலகம் முழுவதையும் நினைத்து "வாழ்க வையகம்', "வாழ்க வளமுடன்' என வாழ்த்த வாழ்த்த, அந்த வாழ்த்து அலைகள் உலக மனித சமுதாயத்தின் அறிவிலே பதிவாகி பிரதிபலித்து, உலகம் முழுமைக்கும் மகிழ்ச்சியை அளிக்கும்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

No comments:

Post a Comment