வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Monday, 23 July 2012

நல்லதை மட்டுமே சிந்தியுங்கள்


தியானத்தின் பலனாக உங்களுடைய மனதில் அமைதி நிறைந்து விளங்கும். மனதில் ததும்பும் அமைதி உடல் முழுவதும் பரவி புத்துணர்ச்சியையும், புதுபலத்தையும் அளிக்கிறது. அந்த சமயத்தில் நாம் பின்வருமாறு எண்ண வேண்டும். ""ஆண்டவன் அருளால் எனது உடலில் புதுஉணர்வும், புதியபலமும் தோன்றி இருக்கின்றன. மனதில் அமைதி தவழ்கிறது. வாழ்வும் அமைதி நிறைந்ததாகக் காட்சி அளிக்கிறது. தொடர்ந்து இறைவன் அருளால் எனக்கு அமைதியான வாழ்க்கையும், நல்ல உடல்நலமும், நீண்ட ஆயுளும் கிடைக்கட்டும்.'' என்று நீங்களே உங்களுக்கு ஆசி அளித்துக் கொள்ள வேண்டும். நல்ல உள்ளத்துடனும் ஆரோக்கியமான உடல் நிலையுடனும் நீங்கள் சமுதாயத்திற்குப் பயன்படக்கூடியவராக இருக்கவேண்டும் என்றால் உங்களுக்குள் நீங்களே நல்ல சிந்தனைகளை சிந்திப்பது அவசியமாகும். இப்பயிற்சி உங்கள் மனப்பதிவிலும், உடலிலும் ஆழ்ந்த முத்திரைகளை உண்டாக்கும். முதலில் தனக்குத் தானே ஆசி அளித்துவிட்டு, பின்னர் மனைவி, குழந்தைகள், குடும்பம், சமுதாயம் என்று நம்மைச் சுற்றிலும் இருப்பவர்களின் நன்மைக்காகவும் தியானிக்க வேண்டும். இப்படி சிந்திப்பதன் மூலம் நல்ல குடும்பமும் சமுதாயமும் உருவாக வழிஉண்டாகிறது.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

No comments:

Post a Comment