வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Saturday, 28 July 2012

பெற்றோர் தவமும் - குழந்தைகள் நலனும்


பெற்றோர் எந்த முறையிலே மனம், உடல் அமைப்பிலே இருக்கின்றார்களோ அதை ஒட்டித்தான் ஒரு குழந்தை உருவாக முடியும். மரத்தை ஒட்டித்தான் விதை இருக்கும். அந்த விதையை ஒட்டித்தான் மரம் இருக்கும். இது தொடர் நிகழ்ச்சி. குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று சொன்னால், பெற்றோர்கள் மன நலத்திலே, உடல் நலத்திலே நலம் உள்ளவர்களாக அமைய வேண்டும்; இருக்க வேண்டும். பெற்றோர்கள் இடத்திலே ஒருவருக்கு ஒருவர் பிணக்கு, மனத்தாங்கல் இருக்குமேயானால், நமது உடலிலே முக்கியமான சக்தியாகிய சீவகாந்த ஆற்றல் பிணக்குற்று அது விஷத் தன்மையாக மாறக் கூடியதாகவே அமையும். அது குழந்தைகளையும் பாதிக்கும். ஆகவே, மனநலமும், உடல் நலமும் காத்து இனிமை காப்போம்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

No comments:

Post a Comment