செயல் செய்தால் அதற்கான விளைவை அனுபவித்தே ஆக வேண்டும் என்கிறீர்கள். அப்படியெனறால் வினைப் பதிவுகளை தவத்தின் மூலம் போக்க முடியாதா?
அகநோக்குப் பயிற்சியின் மூலம் வினைப் பதிவுகளைப் போக்க முடியும். முதலில் மனதை உயிரில் ஒடுக்கி ஆன்ம உணர்வு பெற வேண்டும்.
பிறகு, உயிரை இறைநிலையில் ஒடுக்கித் தெய்வ உணர்வைப் பெற வேண்டும். இன்ப, துன்ப உணர்வுகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் மனிதன் இந்நிலையில் உண்மையுணர்வு பெற்றுப் பின் மனம் மாற்றும் உடல் நிலைகளை கடந்து, உயிர் நிலையில் நிலைத்துப் பின் உயிர் நிலையையும் தாண்டித் தெய்வ நிலையில் லயித்து ஆற்றும் செயல்களெல்லாம் - கடமையுணர்வின் கீழ் எல்லோருக்கும் பயனாகும். அறிவோ, தூய்மையான மெய்ப்பொருளோடு ஒன்றி நிற்கும். இங்கு பதிவான பழிச்செயல்கள் செயலுக்கு வராதது மட்டுமல்ல, முன்பிருந்த பதிவுகள் யாவும் அடியோடு முறிந்தும் போகும்.
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி.
No comments:
Post a Comment