ஆசையின் பேரிலும், அனுபோகத்தின் பேரிலும் மனத்தை சிக்க விடுவதே பற்று. இந்தப் பற்று பிறவியின் நோக்கத்தையே பாழாக்கி விடும். இதனால் வாழ்வதே பொருட்களை நுகரவும், பிறர் கவரமாட்டாமல் தடுக்கவும் தான் என்பது மனத்தின் இயல்பாகவே ஆகிவிடும். பற்று கடும்பற்றாகவும் மாறும், தடை வரும்போது சினமாகவும் உருவெடுக்கும். ஐம்பெரும் பழிச்செயல்களையும் செய்யத் தூண்டும்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
No comments:
Post a Comment