வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Saturday 8 October 2011

சினத்தை அடக்குதல்

சினத்தை அடக்குதல்

சினத்தை ஒழிப்பதாக நினைத்துச் சிலர் அதை அடக்குவார்கள். அதாவது, சினத்தை எழவிட்டு அதனை வெளிப்படுத்தாமல் தம் மனத்திலேயே அடக்கிவிடுவார்கள். அது குளிப்பதாக நினைத்துச் சேறு பூசிக்கொள்வதாகும். எழுந்த சினம் வெளிப்படுமானால் எழுந்த இடத்திலும், செல்லும் இடத்திலுமாக இரண்டு இடங்களிலும் தீமை செய்யும். எழுந்த பிறகு அடக்கப்படும் சினமோ அந்த இரண்டு பங்குத் தீமைகளையும் எழுந்த இடத்திலேயே, சினம் கொண்டவருக்கே செய்து விடும்.

அது மட்டுமன்று; சினத்தை அடக்குவதனால் சீக்கிரம் அடிக்கடி சினம் கொள்ளுகின்ற கேடு வந்துவிடும். நரம்புத் தளர்ச்சி, இதய பலவீனம், இரத்த அழுத்தம், இன்னும் தொடர்புடைய நோய்களெல்லாம் சினத்தை வெளிப்படுத்துவரைவிட அடக்குபவருக்கு அதிக அளவிலும் அடிக்கடியும் வரும்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

2 comments:

  1. sinathai veli paduthinal nam jeevakantham selavaagumae ?

    ReplyDelete
  2. மனிதன் என்னும் சீவகாந்த குளத்தில் ஒரு மிகப் பெரிய பொத்தல் சினம் ஆகும். எனவே தான் சினம் கொண்டோருக்கு பல நோய்களும் தோன்றுகின்றன. வாழ்க வளமுடன்.

    ReplyDelete