வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Saturday, 31 December 2011

அன்பும் கருணையும்

அன்பும் கருணையும்

இயற்கையின் திருவிளையாடல்களால் தோன்றி இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்திலும் மறுக்கவோ, மாற்றவோ முடியாத நியதியாக அமைந்திருக்கும் அன்பையும் கருணையையும் அந்தத் தோற்றங்களில் ஒன்றான மனிதனானவன் உணர்ந்து தன்வாழ்விலும் செயல்களிலும் பின்பற்றி வாழ்வதே இறைவழிபாடு ஆகும்.

அன்பும் கருணையும் என்ற மாயக் கயிறு தான் தெய்வ நிலையையும் எல்லா பொருட்களையும், உயிர்களையும், மனிதர்களையும் வழிநடத்திக் கொண்டிருக்கின்றது. இதனை உணர்ந்து நடந்து கொள்வதற்கு வாய்ப்பான ஆறாவது அறிவு மனிதனுக்கு அமைந்திருக்கிறது. இந்தப் பெருநிதியை மனிதன் அறிந்து கொள்ளாமலோ, அலட்சியப் படுத்தியோ, உணர்ச்சிவயப்பட்டோ, வாழ முற்பட்டால் கயிறு அறுந்த காற்றாடியைப் போல், நெறி பிறழ்ந்த வாழ்வு வாழ்ந்து மனிதன் துன்பங்களை ஏற்க வேண்டிவரும்.

எனவே அன்பும் கருணையும் மனித வாழ்வுக்கு இன்ப ஊற்று என உணர்ந்த விழிப்புடன் வாழ்ந்தால், இன்முகமும் இனிய சொல்லும் உதவும் கரங்களும் வெற்றி வாழ்வும் உருவாகும்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

உலக அமைதி வேள்வி - டிசம்பர் 31, 2011 மாலை 6.00 மணி முதல் @ VMSKY SG 357788


No comments:

Post a Comment