வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
உலக சமுதாய சேவா சங்கம் – கிராமிய சேவைத் திட்டம் - (WCSC - VSP)
கிராமிய சேவைத் திட்டம்
நோக்கம்:
- இந்திய நாட்டில் கிராமங்கள் அதிகமாக உள்ளன. கிராமங்கள்தான் நாட்டின் முதுகெலும்புகளாக உள்ளன.
- கிராம மக்கள் பொருளாதார ரீதியிலும், கல்வியிலும் மேலும் வளர வேண்டும்.
- கிராமத்து மக்கள் இயல்பாகவே கடும் உழைப்பாளிகள், பெரும்பாலும் சூதுவாது அற்றவர்கள்.
- எளிமையான வாழ்வு வாழ்பவர்கள்.
- இப்படிப்பட்ட நல்லவர்களின் வாழ்வில் பெரிய முன்னேற்றம் இல்லாததற்கு காரணம் சரியான கல்வியும், வழிகாட்டுதலும் இல்லாமையேயாகும்.
- கிராமப்புற மக்களின் உடல், உயிர், மனம், அறிவு மற்றும் குடும்பம் மேம்படவும்,
- சாதி, இன, மத வேறுபாடுகள் இன்றி மனிதநேயத்தோடு ஒத்தும் உதவியும் வாழ்வதற்காகவும்,
- கிராமப்புற மக்கள் அனைவருக்கும் இலவசமாக மனவளக்கலை யோகா கற்றுக் கொடுப்பதற்காக உலக சமுதாய சேவா சங்கம் ஒரு சிறப்புத் திட்டத்தினை உலக சமுதாய சேவா சங்கம்-கிராமிய சேவைத் திட்டம் (The World Community Service Centre – Village Service Project சுருக்கமாக WCSC-VSP) என்ற பெயரில் துவக்கியுள்ளது.
- பதினான்கு வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இத்திட்டத்தின் மூலம் முழுமை நல வாழ்விற்கான மனவளக்கலை யோகா கற்பிக்கப்படுகிறது.
திட்டத்தின் பயன்கள்
- உடல் நலம் காக்க – எளியமுறை உடற்பயிற்சிகள்
- மனஅமைதி பெற – எளியமுறை தியானப் பயிற்சிகள்
- உயிர்வளம் காக்க – சித்தர்கள் பயிற்சி முறையான காயகல்பப் பயிற்சி
- நற்பண்புகளை அடைய – அகத்தாய்வு பயிற்சிகள்
- விளைவறிந்து செயலாற்றும் விழிப்பு நிலை பெற – செயல்விளைவுத் தத்துவம்.
- அறவாழ்வு – கடமைகளைக் கர்மயோக நெறிப்படி செய்தல்.
- புறத்தூய்மை – சுற்றுப்புற சுகாதாரம்
- அகத்தூய்மை – அமைதியான வாழ்க்கை
- இணைந்து வாழ்தல் – மனிதநேயம்
- மெய்ப்பொருள் பற்றிய அறிவு – இறைத்தத்துவம்
ஆகியவை கற்றுத் தரப்படுகின்றன.
- தங்கள் கடமைகளை சிறப்பாகச் செய்து வெற்றி பெறத் தேவையான கர்மயோக நெறிகளை ஆசான் அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் வகுத்துக் கொடுத்துள்ளார்கள்.
- இப்பயிற்சிகளை செய்வதன் மூலம் கிராமப்புற மக்கள் உடல்நலம் பெறுவார்கள். மனதில் அமைதியும், நிறைவும், மகிழ்ச்சியும் அடைவார்கள். ஒழுக்கம், நன்னெறிகள் மற்றும் நற்பண்புகள் நிறைந்த அறநெறி வாழ்க்கையை வாழ்வார்கள்.
கிராமிய சேவைத் திட்ட காப்பாளர்கள்
- அருள்தந்தை அவர்களின் கர்மயோக வாழ்க்கை நெறிகளை ஏற்றுக் கொண்டவர்களும், மேலும் விருப்பம் உள்ளவர்களும் இத்திட்டத்தில் கர்மயோக காப்பாளர்களாக சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
- குறைந்தது தினமும் 1 ரூபாய் என்ற வகையில் ஆண்டிற்கு ரூ.360/-ம் அதற்கும் அதிகமாகவோ (அ) வருமானத்தில் ஒரு சகவிகிதமோ (1%) அல்லது அதற்கும் அதிகமாகவோ நன்கொடைகள் செலுத்தி கர்மயோக காப்பாளர்களாக தங்களை இணைத்துக் கொள்ளலாம்.
- ஆண்டிற்கு ஒருமுறை காப்பாளர்கள் தவறாது நன்கொடை செலுத்தி கர்மயோக காப்பாளர்கள் என்ற தகுதியை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
- காப்பாளர் நிதியை தங்கள் ஊரிலுள்ள ஆக்ஸிஸ் வங்கியில் வருடத்திற்கொருமுறை செலுத்தலாம்.
- காப்பாளர்கள் நன்கொடையிலேயே இத்திட்டம் செயல்படும்.
- காப்பாளர்கள் அல்லாதவர்களிடமிருந்தும் இத்திட்டத்திற்கு நன்கொடை பெற்றுக் கொள்ளப்படும்.
- திரும்பப் பெறாத வைப்பு நிதியாக (Non Refundable Deposit) ரூபாய் 5,000/-, 10,000/-, 1,00,000/-, 10,00,000/-ம் அல்லது அதற்கு மேலும் வழங்கலாம். இத்தொகையிலிருந்து கிடைக்கும் வட்டி முழுவதும் காப்பாளர் நன்கொடையாக கணக்கிடப்படும். நன்கொடைகளுக்கு 80G வருமானவரி சலுகை உண்டு. இவர்கள் நிரந்தர கர்மயோக காப்பாளர்கள் இருப்பார்கள்.
வங்கி கணக்கு விபரம்:
வங்கியின் பெயர் : AXIS BANK (Payable at Erode)
வங்கி கணக்கு பெயர் : WCSC-VSP
வங்கி கணக்கு எண் : 911010047117701
IFS CODE : UTIB 0000118
WCSC – VSP
கிராமிய சேவைத்திட்டத்தின்
இலக்கு
- சுற்றுப்புற சுகாதாரம்
- நோயற்ற வாழ்வு
- முதியோரை பாதுகாத்தல்
- குடும்ப அமைதி
- சமுதாய விழிப்புணர்வு
- கல்வியில் மேன்மை
- மனிதநேயம்
- மத நல்லிணக்கம்
- அமைதியான கிராமம்
இங்ஙனம்,
குருவின் சேவையில்
SKM. மயிலானந்தன்
தலைவர்,
உலக சமுதாய சேவா சங்கம்
மற்றும் உறுப்பினர்கள்.
No comments:
Post a Comment