 | அகத்தாய்வின் நோக்கம் : -
அறுகுணங்கள் தோற்றம் இயல்பறிந்து மாற்ற அறிவிற்கு அகநோக்கு பயிற்சி தேவை அவ்வுயர்ந்த பயிற்சி பெற்று அமைதி கொள்வீர். - மகரிஷி
அகம் + ஆய்வு = அகத்தாய்வு அகம் என்றால் உள்ளம், ஆன்மா, கருமையம், உள்ளே, வீடு என்று பல பொருள்களைக் குறிக்கும். இங்கே அகம் என்பது உள்ளம் எனும் மனத்தைக் குறிக்கின்றது. ஆய்வு என்பது ஆராய்ந்து பார்ப்பது. குறை நிறைகளை அலசி சீர்தூக்கிப் பார்ப்பது ஆய்வு. தனது மனதை ஆராய்ச்சி செய்து பார்ப்பதே அகத்தாய்வு.
தற்சோதனை என்பது தன்னை சோதித்துக் கொள்வது. தனது குறை நிறைகளை தெரிந்து கொள்வது. தன்+சோதனை=தற்சோதனை.
இப்பயிற்சியின் நோக்கம் : - (1) தன்னைப் பற்றி சிந்தித்துப் பார்த்தல் (2) தனது குறைகளை உணர்தல் (3) குறைகளை நீக்க வழி வகுத்தல் (4) வகுத்த வழியே வாழ்ந்து காட்டுதல்.
மேற்கண்ட முறைகளில் ஆய்வு செய்து தனது குறைகளைப் போக்கி தானும் இன்புற்று வாழ்வதோடு சமுதாயத்திற்கும் துன்பமளிக்காமல் நன்மை செய்து வாழ்வதே அகத்தாய்வின் நோக்கமாகும். இதுவே நமக்கு மகரிஷி அவர்கள் அளித்துள்ள அகத்தாய்வுப் பயிற்சிகள்.
இப்பயிற்சியின் நன்மைகளை நாளை தெரிந்துகொள்வோம். |
No comments:
Post a Comment