சொந்தம்
நாம் உடலால் வேறுபட்டு இருக்கின்ற போதிலும் உள்ளம் என்ற நிலையில் நமக்கும் தெரியாமலே உலக மக்கள் அனைவரோடும் ஒன்றுபட்டே இருக்கின்றோம். ஆகவே நாம் சிந்தனை செய்யும் போது நமது அறிவின் கூர்மைக்கும் வேகத்திற்கும் ஏற்ப, பல சான்றோர்களோடு ஒன்றுபடுகிறோம். நமது அனுபவத்திற்கு எட்டாத பல விஷயங்களை நாம் அறிந்து கொள்வதே இதற்குக் சான்று. இதே போன்று, நாம் கோபம் அடையும் போது பல முரடர்களோடும் முட்டாள்களோடும் ஒன்றுபடுகிறோம். நாம் விரும்பாத, நாமே வெட்கப்படத்தக்க, நாமே வருந்தத்தக்க சில செயல்களை நாம் கோபத்தின் போது செய்து விடுவதே இதற்குச் சான்று ஆகும்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
அகத்தாய்வு முதல் நிலைப் பயிற்சி
மார்ச் 04, 2012 காலை 9.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை @ VMSKY
No comments:
Post a Comment