வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Tuesday, 21 February 2012

தற்சோதனை என்னும் அகத்தாய்வு : -



தற்சோதனை என்னும் அகத்தாய்வு : - தனது குறை...

21
தற்சோதனை என்னும் அகத்தாய்வு : -

தனது குறை ஆழ்ந்துணர்ந்து திருத்தம் பெற்றால்
தருக்கொழியும், பிறரிடம் நட்பு ஓங்கும்.
மனது ஒரு தூய நிலையை நாடிச் செல்லும்
மற்றவரும் இதன் விளைவாய் நலம் காண்பார்கள் ;
'எனது' , 'நான்' எனும் இரண்டு சொற்களுக்கும்
ஏற்புடைய கருத்துணரும் தகைமை கிட்டும்,
உனது எண்ணம், சொல், செயல்களிலே திருத்தம் காண
உயர்ந்த தற்சோதனையைப் பழகிக்கொள்க. - வேதாத்திரி மகரிஷி

நமது வாழ்வில் நாம் அனுபவிக்கும் துன்பங்களுக்கு பெரும்பாலும்
காரணமாக அமைவது நமது எண்ணம், சொல், செயல்களே.
அவற்றை நாம் ஆராய்ச்சி செய்து சீர்திருத்துவதை விடுத்து பிறரின் குறைகளையும் குற்றங்களையும் தேடிக் கொண்டிருக்கிறோம். இது
தவறாகும். மாறாக நம்மிடம் உள்ள குறைகளை நாம் களைய
முயற்சித்தால் நம்மிடம் இருக்கின்ற தன்முனைப்பு நீங்கி, தான்
தனது என்ற பற்று நீங்குவதோடு அன்பும் கருணையும் பெருகும்.
இதற்கு ஏற்ற வழி அகத்தாய்வு எனும் தற்சோதனைதான்.
தற்சோதனை என்பது என்ன? நாளை தெரிந்துகொள்வோம்.


No comments:

Post a Comment