வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Sunday 26 February 2012

] Saint Pulavar ThiyagaRajan, Brother Disciple of...


Facebook
Arulnithi Vinothkumar Vethathiri 
Saint Pulavar ThiyagaRajan, Brother Disciple...




எங்கிருந்தோ வந்தார்! புலவர் க. தியாகராஜன்

உலகில் பிறந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான வாழ்க்கையை மேற்கொண்டு வாழ்ந்து முடிக்கின்றனர். ஆனால், வாழும் காலத்தில் தனது மனம் நல்லன என்ற கண்டவற்றை மட்டுமே செயல்படுத்தி, அதுவும் எவருக்கும் துன்பமில்லாத வகையில் செயல்படுத்தி வாழ்பவர்கள் ஓரிருவர் மட்டுமே. அத்தகையவர்களின் வரிசையில் வாழ்க்கையை வாழ்வாங்கு வாழ்ந்து கண்டவர் புலவர் க. தியாகராஜன் அவர்கள்.

நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் அருகிலுள்ள தேவாங்கபுரம் என்ற குக்கிராமத்தில் பிறந்தார். அவரது தந்தையார் பெயர் கே.பி.கந்தசாமி சர்மாஜி. பள்ளிக்கூடத்தில் முதல் மாணவராக வந்த தியாகராசன் அவர்களுக்கு மேற்படிப்பு படிக்க வசதியில்லை. இவரது திறமையைக் கண்ட திருச்செங்கோட்டைச் சேர்ந்த கண்ணன் என்ற பள்ளிக்கூட ஆசிரியர், இவரது படிப்புக்கு உதவினார். அவரது இல்லத்திலேயே தங்கி உயர்நிலைப் பள்ளிக்கூடப் படிப்பை முடித்தார். பேரூர் சாந்தலிங்க அடிகளார் தமிழ் கல்லூரியில் வித்வான் பட்டம் பெற்றார். அதன் பிறகு அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டம் மற்றும் ஆசிரியர் (M.A..M.Ed.) படித்தார். சில மாதங்களிலேயே சென்னை சைதாப்பேட்டையிலுள்ள ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் ஆசிரியராகப் பணி புரியும் வாய்ப்பு கிட்டியது.

சுவாமி சுத்தானந்த பாரதியாரின் தொடர்பு கிட்டியது. சிவகங்கையிலுள்ள சுத்தானந்த பாரதியாரின் ஆசிரமத்திற்குச் சென்று சுத்தானந்த பாரதியோடு உரையாடுவதுண்டு. கூடுவாஞ்சேரில் 1974 ஆம் அண்டு அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் இரண்டாவது முறையாக வெளிநாட்டுப் பயணத்தை நிறைவு செய்து வந்ததற்காக வரவேற்பு விழா நடக்க இருந்தது. திருக்கோயில் என்ற பத்திரிகையின் ஆசிரியர் திரு.முருகவேல் அவர்கள், இப்படி ஒரு நிகழ்ச்சி நடக்கிறது நீங்களும் வருகிறீர்களா? என்று கேட்க, முருகவேல் அவர்களிடம் கொண்ட ஈடுபாட்டின் காரணமாக அந்நிகழ்ச்சிக்குச் சென்றார். தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்களின் உரையைக் கேட்டபோது, தான் தேடிக் கொண்டிருந்த ஆன்மிகப் பெரியார் இவர்தான், இவரோடு தொடர்பு கொண்டு வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வந்தது.

அப்போது, சென்னை தியாகராய நகரில் வால்மீகி தெருவில் வேதாத்திரி மகரிஷி அவர்கள் தங்கியிருந்தார்கள். அவரிடம் சென்று குண்டலினி யோகத்தை முறைப்படி கற்றுக் கொண்டார். ஓராண்டிலேயே வேதாத்திரி மகரிஷி அவர்களின் அணுக்கச் சீடராக இருக்கும் வாய்ப்பு கிட்டியது. இவரது மூலமாக, மகரிஷி அவர்கள் அளித்து வந்த துரியாதீத தவத்தின் மேன்மையைக் கேள்விப்பட்ட சுவாமி சுத்தானந்த பாரதி அவர்கள் மகரிஷி அவர்களிடம் துரியாதீத தீட்சையைப் பெற்றார். குரு பக்தி என்பதற்கு இலக்கணமாகத் திகழ்ந்த தியாகராஜன் அவர்களைப் பார்க்கும்போதெல்லாம் இராமாயணக் கதையில் இராமன் அருகில் நின்று சேவை செய்யும் அனுமனின் நினைவுதான் வரும். பணிவு, துணிவு, கனிவு, நேர்மை, வாய்மை, எளிமை, சுறுசுறுப்பு போன்ற நற்குணங்களுக்கெல்லாம் சிகரமாகத் திகழ்ந்தார் தியாகராஜன். ***வளரும்***

தொகுப்பு: A/N. R. சகுந்தலா அவர்கள், அறிவுத்திருக்கோயில், ஆழியாறு.



2 comments:

  1. I have seen Ayya in Aliyar. His sincerity & dedication in conducting meditation at Aliyar was remarkable. We all miss him. RIP

    ReplyDelete
  2. A/N Vinoth Kumar, Good work. Please continue and publish the complete biography of Pulavar Ayya

    ReplyDelete