 | வேதாத்திரிய சிந்தனைகள் : - மெய்யுணர்வு உய்யும் வகைத்தேடி உள்ளம் உருகி நின்றேன் உயர் ஞான தீட்சையினால் உள்ளொடுங்கி மெய்யுணர்வு என்ற பெரும் பதம் அடைந்தேன் மேல்நிலையில் மனம் நிலைத்து நிற்க நிற்க ஐயுணர்வும் ஒன்றாகி அறிவறிந்தேன் ஆசையென்ற வேகம் ஆராய்ச்சி யாச்சு செய்யும் தொழில்களில் கடமை உணர்வு பெற்றேன் சிந்தனையில் ஆழ்ந்து பல விளக்கம் கண்டேன். - மகரிஷி உய்தல் என்றால் அடைதல், சாதித்தல், நிறைவு பெறுதல் என்று பல பொருள்கள் உண்டு. இங்கே நிறைவு பெறுதல் என்பது பொருந்தும். ஆறறிவு பெற்ற மனிதனின் பிறவியின் நோக்கம் இறைநிலையோடு இனைந்து நிறைவு பெறுதலே ஆகும். இதை சாதிக்க உள்ளம் வருந்தி நின்றபோது குருவின் மூலம் தீட்சை பெற்று என்னுள்ளே நான் ஆழ்ந்து பயணித்த போது மெய்ப்பொருளை உணரமுடிந்தது. இதனால் நான் முழுமைப்பேறு என்ற பெரும் பதத்தை அடையமுடிந்தது. மனம் ஐயுணர்வு என்ற நிலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு தன் மூலமான பேரறிவை அறிந்தது. தேவையற்ற ஆசைகள் விலகி மனம் ஆராய்ச்சியில் நிலைத்தது. கடனே என்று செய்த செயல்கள் எல்லாம் கடமை உணர்வோடு செய்ய முடிந்தது. மனதை பெரின்பநிலையில் இணைத்துக் கொண்டதால் பிரபஞ்ச ரகசியங்கள் பல அறியமுடிந்தது. |
No comments:
Post a Comment