வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Saturday, 10 March 2012

வேதாத்திரிய சிந்தனைகள் : - தவம்


Facebook
Vallal Ramamurthy posted in VMSKY.
வேதாத்திரிய சிந்தனைகள் : - தவம் ஒன்றி ஒன்றி...
Vallal Ramamurthy 10:47pm Mar 9
வேதாத்திரிய சிந்தனைகள் : - தவம்

ஒன்றி ஒன்றி நின்று அறிவைப் பழக்க
உறுதி, நுட்பம், சக்தி இவை அதிகமாகும்
அன்று அன்று அடையும் அனுபவங்கள் எல்லாம்
அறிவினிலே நிலைத்து விடும், ஆழ்ந்து ஆய்ந்து
நன்று என்று கண்டபடி செயல்கள் ஆற்றும்
நற்பண்பு புலன்களுக்கு அமைந்து போகும்
என்றென்றும் கருவிடத்தே அறிவை ஒன்றும்
இயற்கைமுறை சிறப்புடைத்து, இதுவே தவமாம். - வே. மகரிஷி

ஐம்புலன்கள் வழியே வெளியேறி செயல்கள் ஆற்றி, விளைவாக
துன்பத்தை அடையும் மனத்தை, அதன் மூல நிலையாகிய உயிரின்
மீது ஒன்றச் செய்யும்போது அறிவுக்கு விழிப்பு நிலை, மனதுக்கு
ஆற்றல், ஓர்மை, சீர்மை, கூர்மை, நேர்மை உருவாகும். தினமும்
வாழ்வில் நாம் அடையும் அனுபவங்கள் நமக்கு பாடங்களாக
அமையும். நற்செயல்களை மட்டுமே செய்யும் நற்பண்பு
இயற்கையாக அமைந்து விடும். மனதுக்கு அமைதியும் ஏற்படும்.
மூலாதாரத்தில் உறங்கும் குண்டலினியை எழுப்பி ஆக்ஞா
சக்கரம் முதல் பல நிலைகளில் நிறுத்திப் பழகுவதே தவம், தியானம்.


No comments:

Post a Comment