வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Saturday, 24 March 2012

அகத்தாய்வு

அகத்தாய்வு

கோபம், வஞ்சம், பொறாமை, வெறுப்புணர்ச்சி, பேராசை, ஒழுக்கம் மீறிய காமநோக்கம், தற்பெருமை, அவமதிப்பு, அவசியமற்ற பயம், அதிகார போதை என்ற பத்து வகையும் நமது உள்ளத்தில் நிலைபெறவொட்டாமல் அவ்வப்போது ஆராய்ந்து களைந்து கொண்டே இருக்க வேண்டும். இவை வளர்ந்தால் நல்லெண்ணம் வருவதற்கோ, நிலைப்பதற்கோ, இடமில்லாத துன்பம் தரும் காடாக நமது உள்ளம் மாறி விடும். சீவகாந்த சக்தியை பாழாக்கிக் கொண்டே இருக்கும் ஓட்டைகளாக இக்கெட்ட குணங்கள் மாறிவிடும்.

காலையிலும் மாலையிலும் 10 நிமிட நேரம் அமைதியாக உட்கார்ந்து உள்ளத்தை சோதனையிடும் பணியைத் தொடங்குங்கள். 30 நாட்களில் கிடைக்கும் வெற்றியை அனுபவத்தில் கண்டு மகிழுங்கள்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

No comments:

Post a Comment