வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Saturday, 24 March 2012

வேதாத்திரிய சிந்தனைகள் : எண்ணத்தின் வலிமை : -


Facebook
Vallal Ramamurthy posted in VMSKY.
வேதாத்திரிய சிந்தனைகள் : எண்ணத்தின் வலிமை : -...


வேதாத்திரிய சிந்தனைகள் : எண்ணத்தின் வலிமை : -

ஒளி ஒன்றுதான். அது ஆற்றிய செயல்களும் விளைவுகளும்
பலப்பல. அதுபோல எண்ணம் ஒன்றுதான். ஆனால் அது ஆற்றிய செயல்களும் விளைவுகளும் கணக்கிட முடியாது. எண்ணத்தின் விளைவறியாது, எண்ணி எண்ணி அது விளைவாகிச் செயலில்
மலரும்போது அவற்றைத் தாங்க முடியாமல் மனிதன்
திணறுகிறான். அவனே வலையும் விரித்து அதற்குள் அவனே
சிக்கிக் கொள்ளுகிறான். அவரவர் வாழ்வைச் சமைக்கும்
அற்புதச் சிற்பி அவரவர் எண்ணமே.

எண்ணம் உணர்ச்சி வயப்படும்போது, அது ஆசை, சினம்,
கடும்பற்று, பால் கவர்ச்சி, ஒருதலைப்பட்ட உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் ஆகிய ஆறு குணங்களாக விளங்குகின்றது.

எண்ணம் தனது நிலை உணர்ந்து முழுமைப் பெறும்போது, அது,
நிறைமனம்,சகிப்புத் தன்மை, ஈகை, கற்புநெறி, சமநோக்கு,
மன்னிப்பு, அன்பு, அருள் என்ற நற்குணங்களாகப் பரிணமிக்கின்றது.

வாழ்க வையகம். வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.


No comments:

Post a Comment