வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Sunday 18 March 2012

வேதாத்திரிய சிந்தனைகள்


Facebook
Vallal Ramamurthy posted in VMSKY.
வேதாத்திரிய சிந்தனைகள் : - பரம அணு முதலாய்ப்...


வேதாத்திரிய சிந்தனைகள் : -

பரம அணு முதலாய்ப் பார் விண்மீன் அனைத்தும்
பம்பரம் போல் சுழன்று மிதந்துருண்டு உன்னில் ஆகும்
தரம் அறிவே என்னும் தத்துவம் உணர்ந்திட்டேன்
தற்பரனாக உன்னை என்னுள்ளே உணரப் பெற்றேன்.
- - வேதாத்திரி மகரிஷி

வற்றாயிறுப்பு, பேராற்றல், பேரறிவு, காலம் எனும் நான்கு
தன்மைகளுடைய இறையாற்றலானது தனது ஆற்றலாலும்
அறிவாலும் எல்லா தோற்றங்களாகவும் மலர்ந்துள்ளது.
அத்தோற்றங்கள் அனைத்திலும் ஒழுங்காற்றலாக இருந்து
அவைகளை இயக்குவது அதனுடைய அறிவுநிலை ஆகும்.
இறைநிலையின் முதல் தன்மாற்றமாகிய இறைத்துகள்
முதல் கோடானு கோடி கோள்களும் நட்சத்திரங்களும்
தன்னைத்தானே சுற்றிக்கொண்டு, மிதந்துகொண்டு இருப்பதும்
அந்த இறைவேளிக்குள்ளேதான். எல்லா இயக்கங்களும்
நடைபெறுவது அதன் அறிவாற்றலால்தான். அதே இறைநிலை
தனக்குள்ளாகவும் அறிவாக இருந்து தன்னை இயக்குவதை
மனிதன் உணரும்போது தன்னை தற்பரனாக
அறிந்துகொள்கிறான். தன் + பரம் = தற்பரம். அதாவது
தன்னையே பரம்பொருளாக அறிந்து கொள்கிறான்.


1 comment:

  1. உலக தோற்றத்தின் பிரமாண்டத்தை எளிய சில வரிகளில் சொல்லி பிரமிக்கவைத்துவிட்டீர்கள்

    ReplyDelete