வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Wednesday, 21 March 2012

வேதாத்திரிய சிந்தனைகள் : - மறைபொருளே எல்லாம்


Facebook
Vallal Ramamurthy posted in VMSKY.
வேதாத்திரிய சிந்தனைகள் : - மறைபொருளே எல்லாம்...


வேதாத்திரிய சிந்தனைகள் : - மறைபொருளே எல்லாம்

அகண்ட பேரண்டமும் அணுவுமான
ஆண்டவனோடெனை இணைத்த அடக்கப் பேற்றால்
அகண்ட பேராதாரத் திருப்பி யக்கம்
அனைத்து விளைவும் எனது அறிவுக் கெட்ட
அகண்ட நிலையே நானாய் அறிவாய் ஆற்றி
ஆங்காங்கு அதுவதுவாய் விளைவு வேறாய்
அகண்டத்தும் கண்டத்தும் அடங்கியுள்ள
அத்தனை மறை பொருளும் விளங்கக் கண்டேன்.-மகரிஷி

மறைபொருளான பரம்பொருளோடு என்னை நான் மனதால் இணைக்கப் பெற்றதால் பேரண்டமாகவும் அணுவுமாகவும்
எல்லாமாகவும் இருக்கும் இறைநிலையின் இருப்பு மற்றும்
அதன் இயக்கம், விளைவு எல்லாம் எனது அறிவுக்கு
புலப்பட்டது. இந்த நிலையில் பரம்பொருளே நானாகவும்,
பேரண்டமாகவும், உலகமாகவும், மனமாகவும் எல்லா தோற்றங்களிலும் அறிவாகவும் மறைபொருளே இருந்து
அதுவதுவாகவும் விளைவுகளை வேறு வேறாகவும் அளிப்பது
அறிந்துகொண்டேன். வாழ்க வளமுடன்.


No comments:

Post a Comment