கலாசாரம்
இயற்கை வளங்களை, வாழ்வின் வளங்களாக அறிவின் திறனாலும், செயல் திறனாலும் மாற்றிக் கொள்ளும் செயலே கலை ஆகும். இக்கலை மிகமிகச் சிறப்புற்று விண் என்ற நுண்பொருளையும், அதன் ஆற்றலையும், விளைவுகளையும் உணர்ந்து கொள்ளும் அளவுக்கு உயர்ந்துள்ளதால் வாழ்க்கைக்குப் பொருள் பெருக்கும் கலை (விண் + ஞானம்) விஞ்ஞானம் என மதிப்போடு கூறப்படுகிறது. பொருள் வழியே விரிந்து விரிந்து செல்லும் விஞ்ஞானத்தால் வாழ்வில் சிக்கலும் துன்பமும் விளையாத பாதுகாப்புத் தான் ஆச்சாரம் (அறநெறி) என்ற சொல்லால் வழங்கப்படுகின்றது. இந்த இரு சொற்களின் கூட்டான 'கலாசாரம்' தான் மனிதன் வாழ்வில் அனுபவத்தால் விளையால் பண்பாடு ஆகும்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
- Vethathiri Maharishi -
No comments:
Post a Comment