வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Saturday, 7 July 2012

நட்பு


நட்பு

புகழ்ந்துரைகள் பேசி பிறர்பொருள் கவரும் வஞ்சகர்க்கு மகிழ்ந்து பொருள் உதவாதீர். மனம் திறந்த நட்பாக.
வஞ்சகர்கள் எதிரிகளாய் வந்து விட்டால் வியப்பில்லை. வஞ்சகராய் நண்பர்களே வளர்ந்தால்தான் பெருந்தொல்லை.

` அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

நாள் ஒரு நற்சிந்தனை - 07 July 2012 - Of Vethathiri Maharishi


Friday, 6 July 2012

யோகமும் மன அமைதியும்


யோகமும் மன அமைதியும்

மனநிறைவும் மனஅமைதியும் உருவானால்தான் வாழ்க்கையின் குறிக்கோளை நாம் நிறைவேற்றிக் கொள்ள இயலும். நமது சேவை முழு அளவிலே சமுதாயத்துக்காக அர்ப்பணிக்கப்பட்டாலன்றி மனநிறைவு கிட்டாது.  அதுபோன்று நமது அறிவு முழு வளர்ச்சியுற்று தன்னிலை விளக்கம் பெற்றால் தான் மன அமைதி நிலைத்திருக்கும்.  இதற்கான வாழ்க்கை நெறியே யோகம் ஆகும்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

நாள் ஒரு நற்சிந்தனை - 06 July 2012 - Of Vethathiri Maharishi


Thursday, 5 July 2012

Update

Vazhga Valamudan.

Due to renovation work at Vethahiri Maharishi Simplified Kundalini Yoga (VMSKY) Potong Pasir centre, please note there would not be regular classes on July 07 & 08, Sat n Sunday. Classes would re-commence next week as usual.

For submission of VISION Diploma applications during this period, please approach any Mandram volunteers.

வாழ்க வளமுடன்!!!

கணிப்பு


கணிப்பு

நாள்தோறும் செய்தவற்றைப் பயனை நீங்கள்
நல்லுறக்கம் கொள்வதன்முன் கணித்துக் கொள்வீர்
மீள்வதில்லை போயினவை எனினும் நீயோ
மேற்பட்டாய் அனுபவத்தில் அதுவே இலாபம்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

VISION Diploma enrollments are ON st Singapore now! Don't miss the opportunity! வாழ்க வளமுடன் !!

நாள் ஒரு நற்சிந்தனை - 05 July 2012 - Of Vethathiri Maharishi


Wednesday, 4 July 2012

Diploma in 'Yoga for Human Excellence' of VISION, Aliyar at Singapore. Enrollments ON now! வாழ்க வளமுடன்

சடங்குகள்


சடங்குகள்

சடங்குகளை நிதானமாகப் பரிசீலித்துப் பார்க்க வேண்டும்.  ஒவ்வொரு சடங்கும் அடியோடு ஒன்றுமில்லை என்று எடுத்து விடாமல் அதற்குரிய காரணங்களை எல்லாம் கண்டுபிடித்தோம் என்றால் பல சடங்களுக்கு இன்னும் மனித சமுதாயத்திலே தேவைஇருக்கிறது என்பது புலப்படும்.  இன்னும் பலவற்றை உதறிவிட்டு முன்னேற வேண்டியதாக உள்ளது.  சடங்குகள் பற்றி ஆராய்ச்சிக் கருத்தரங்குகள் நடத்தி முடிவுக்கு வர வேண்டும்.  முடிவெடுத்த பின் அந்த முடிவை நடைமுறைப்படுத்த வேண்டும்.  நடைமுறைப்படுத்தினால் தான், அதன் பிறகு சமுதாயத்திலே மாற்றம் வரும்.  இந்தச் சீர்த்திருத்தப்பணி காலத்தால் தேவையாகிவிட்டது.  முக்கியமாக இளவயதினோர் இதிலே அக்கறை காட்ட வேண்டும்.  இத்துறையில் ஆர்வம் கண்டோர், சமுதாய நலநாட்டம் கண்டோர் விரோத மனப்பான்மை எழாத விதத்திலே சமுதாயத்தோடு ஒத்தும் கலந்தும் செயலாற்ற வேண்டும்.

- அருத்தந்தை வேதாத்திரி மகரிஷி -

நாள் ஒரு நற்சிந்தனை - 04 July 2012 - Of Vethathiri Maharishi


Tuesday, 3 July 2012

Vazhga valamudan! Please join for INTROSPECTION - 3 course.

மதம், வேதம், சாத்திரம்


மதம், வேதம், சாத்திரம்

வாழத் தெரியாதவர்களுக்கும், வாழ்க்கை அனுபவமில்லாதவர்களுக்கும் அதை அறிந்தவன் வகுத்துக்காட்டும் வாழ்க்கை நெறிகள் மதம் என்றும், அறநெறிகளைப் போதிக்கும் நூல் இயற்கை அமைப்பைக் கூறுமிடத்து வேதமாகவும், மனிதன் செயலை முறைப்படுத்துமிடத்து சாத்திரமாகவும் மதிக்கப் பெறுகின்றன.

அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

நாள் ஒரு நற்சிந்தனை - 03 July 2012 - Of Vethathiri Maharishi


Monday, 2 July 2012

அறிஞன்


அறிஞன்

ஐயுணர்வின் இயக்கங்களுக்கு ஏற்ப மெய்யுணர்வு கட்டுப்பட்டுச் செயல்படும் போது காமம், குரோதம் முதலிய குணங்களாகவும், மெய்யுணர்வின் உயர்வு நிலைக்கேற்ப ஐயுணர்வு கட்டுப்பட்டுச் செயல்படும் போது ஒழுக்கம், நீதி, நேர்மை, அன்பு என்பனவாகவும் மனிதனின் நிலை மாற்றமடைகிறது.

கருவமைப்பு, உணவு, எண்ணம், செய்கை இவற்றால் அறிவின் நிலை உயர்ந்து, ஆராய்ச்சியால் இயற்கை என்ற தெய்வ நிலையையும், உடலியக்கத் தேவைகளையும், அறிவின் சிறப்பியல்புகளையும் அறிந்து மெய்யுணர்வின் நிலைக்கு ஐயுணர்வை கட்டுப்படுத்தி வாழ அறிந்து கொண்டவனே, அறிந்து கொண்ட விதம் வாழ்ந்து வருபவனே அறிஞன் எனப்படுகிறான்.

அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி


நாள் ஒரு நற்சிந்தனை - 02 July 2012 - Of Vethathiri Maharishi

Sunday, 1 July 2012

ஆசையும் ஞானமும்


ஆசையின் மறுமலர்ச்சியே ஆறு குணங்கள். ஆசை தடைப்படும் போது அத்தடையை நீக்க எழும் ஆர்வமே சினம். ஆசையுள்ள பொருட்களைத் தனக்கு வேண்டுமெனவும், பிறர் கவராமலும் பாதுகாத்துக் கொள்ளும் செயலே கடும்பற்று (லோபம்). ஆசை பிற பாலை நாடி எழுந்தால் அதுவே மோகம். ஆசையானது பொருள், செல்வாக்கு, புகழ் இவற்றின் மீது அழுந்தி அதைக் கொண்டு மக்களை உயர்வாக அல்லது தாழ்வாகக் கருதும் பேதம் மதம். சினத்தை முடிக்க வலுவையும், வாய்ப்பையும் நாடி நிற்கும் ஆசைதான் வஞ்சம்.
ஆசையின் இயல்பறிந்து அதை நலமே விளைவிக்கத்தக்க வகையில் பண்படுத்தி - ஒழுங்குபடுத்திவிட்டால், அதுவே ஞானமாகவும் மலரும்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

நாள் ஒரு நற்சிந்தனை - 01 July 2012 - Of Vethathiri Maharishi