Address : 53 A, Woodsville close, Potong Pasir, Singapore 357788
Pages
வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்
Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164
Email : arulmalarsingapore@gmail.com
Saturday, 17 March 2012
மெய் உணர்தல்
உயிர் என்ற மூல சக்தியே எல்லா இயக்கங்களுக்கும் பேராதாரமாக உள்ளது. இது பூரணமானது. எங்கும் என்றும் எப்போதும் எந்த வகையிலும் மாறுபடாமல் நித்தியமாய் சத்தியமாய் இருப்பதால் இதை மெய் என்றும், இந்நிலையை அறியும் அறிவின் செயலை மெய்யுணர்தல் என்றும் சொல்லப்படுகிறது.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
Kayakalpam On March 18, 2012 Sunday 1.00 PM @ VMSKY
Friday, 16 March 2012
வேதாத்திரிய சிந்தனைகள் : - "நானே நாம்"
Vallal Ramamurthy posted in VMSKY.
Vallal Ramamurthy 5:36pm Mar 16 வேதாத்திரிய சிந்தனைகள் : - "நானே நாம்" :-
நான் என்ற தத்துவமே நாமா யுள்ளோம்
நாடுகள் பலவற்றில் வாழுகின்றோம்
ஊன் உருவம் வரையில் அறிவெல்லை யாக்கி
ஒருவருக் கொருவர் இன, தேச, சாதி,
தான், தனது எனும் பேதம் கொண்டு வாழ்வில்
தனித்தியங்கித் துன்புற்றோம், ஆழ்ந்தா ராய்ந்து,
ஆண்மநிலை யறிந்ததனால், பேதமற்ற
அரூபசக்தி நிலையில் நாம் ஏகனானோம். - மகரிஷி
இருப்புநிலை என்ற பரம்பொருளும் அதன் எழுச்சி நிலையாகிய
விண்ணும் இணைந்தே எல்லா தோற்றங்களும், எல்லா
உயிரினங்களும், மனிதன் உட்பட என்பதை நாம் உணராத
காரணத்தால், தான், தனது என்று அறிவு குறுகிய நிலையில்
எல்லை கட்டி இயங்குவதால் சாதி, மதம், மொழி, தேசம்
என்ற நிலையில் நம்மைத் தனிப்படுத்தி வாழ்க்கையில்
துன்பப் படுகின்றோம். நமது பெற்றோர், அவர்கள் பெற்றோர்,
அவர்கள் பெற்றோர்... என்று பின்னோக்கி ஆராய்ந்து பார்த்தால்
நாம் அனைவரும் ஒருவரின் பிள்ளைகளே என்ற உண்மை
தெரியவரும். அவருக்கு மூலம் இரண்டு விலங்கினங்கள்
ஆகும். விலங்கினங்கள் ஐந்து அறிவு. அவைகளுக்கு முன்
நான்கு, மூன்று, இரண்டு, ஓர் அறிவு தாவரம்வரை செல்லும்.
அவைகளுக்கு மூலம் பஞ்ச பூதங்கள். இதில் முதல் தத்துவம்
விண். விண்ணுக்கு மூலம் சுத்தவெளி எனும் பரம்பொருள்.
இந்த நிலையில் நாம் நம்மை நோக்கிப் பார்த்தோமானால்
நம் எல்லோருக்கும் மூலம் ஒன்றே. இப்போது நாம்
அனைவரும் ஒருவரே என்ற உண்மை அறிகிறோம்.
உருவ நிலையில் நாம் வேறுவேறு. அருவ நிலையில்
நாம் ஒன்றே. அதுவே இறைநிலை. வாழ்க வளமுடன்.
மெய்யறிவு
வெளிச்சத்திலே பொருட்களைத் தெளிவாகப் பார்ப்பது போல, கொள்முதல் விலை தெரிந்தவன் விற்பனை விலையை நிர்ணயிப்பது போல, முறையாக அடுக்கி வைத்த பொருட்களில் தேவையான ஒன்றைக் கால நீளமின்றி குறிப்போடு எடுத்துக் கொள்வது போல, மனிதன் எளிதாகவும், செம்மையாகவும் வாழ்வதற்கு மெய்யறிவு உதவுகிறது.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
Thursday, 15 March 2012
ஞானம்
தத்துவ ஞானம் வேறு, விஞ்ஞானம் வேறு என்று கூற முடியாது. பொருள் நிலையை யூகித்து, உணர்ந்து அதன் நிகழ்ச்சி நிலைகளைக் கூறுபடுத்தி விளக்குவது தத்துவம். பொருள் நிலையை மறந்து அல்லது காண முடியாமல் விடுத்து அதன் நிகழ்ச்சிகளையே பொருள் என மதித்தும், விளக்கிப் பிரித்தும் பேசுவது விஞ்ஞானம். தத்துவ ஞானத்தில் விஞ்ஞானம் அடங்கியுள்ளது. விஞ்ஞானம் தத்துவ ஞானத்தை நாடிச் சென்று கொண்டிருக்கிறது.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
Wednesday, 14 March 2012
மரணம்
மரணம் என்பது உடலியக்க நியதியில் ஒரு மாற்றம் தான். வித்து, சீவகாந்தம், உயிர், உடல், புலன்கள், மனம் இவையனைத்தும் ஒரு இணைப்பாக இயங்கும் போது தான் அது வாழ்வு. உயிரின் இயக்கத்தால் தான் இந்த உடலானது இன்னும் பலவித இயக்கங்களையும் இணைத்துக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. உயிர் இல்லையெனில் தொடரியக்கம் சிதைந்து ஒவ்வொன்றும் தனித்தனியே இயக்கத்தை நடத்திக் கொள்ளும்.
உதாரணமாக, ஒரு கம்பெனி liquidate செய்யப்பட்டால், கம்பெனி என்ற ஒரு அமைப்பிலே சேர்ந்திருந்தவர்கள் வகித்த பதவியை மட்டும் தான் இழக்கிறார்கள், ஆனால் தனித்தியங்குகிறார்கள்.
அதே போல் உடலிலிருந்து உயிர் பிரிந்தவுடன், உடலிலுள்ள அணுக்கள் குழு இயக்கம் பிரிந்து, தனித்தியங்குகின்றன. அணுக்களுடைய கூட்டு இயக்கச் சிறப்பு நிலைகள் மாற்றமடைவதும் அதே அணுக்கள் கூடி மற்றொரு உருவமாகத் திகழ்வதும் இயற்கை நியதி.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
Tuesday, 13 March 2012
நல்லெண்ணம்
நாம் ஒருவரை வெறுக்கிறோம் என்று வைத்துக் கொண்டால் அதன் வெறுப்புணர்ச்சி, மனநலத்திற்குப் பொருத்தமற்றதாக அமையும். அது சீவகாந்தத்தின் மூலமாக உடலை விஷமாக்கக் கூடும். ஒருவர் கெட வேண்டும் என்று நினைக்கும் போது அந்த எண்ணத்தினாலே முதலில் நாமே கெட்டு விடுகிறோம். அது கருமையத்தில்
பதிவும் ஆகிவிடுகிறது. பல தடவை ஒருவர் கெட வேண்டும் என்று நினைக்கும் பொழுது நமது சீவகாந்த அலை களங்கப்படுகிறது. நம் நினைவினாலே தான் நாம் கெட்டுப் போகின்றோம்.
இந்தக் கெட்ட எண்ணம், தன்னைக்கெடுத்து வெளியிலும் பாய்கிறது. ஆகவே இது முரண்பாடான எண்ணம், பொருந்தாத எண்ணம், வாழ்வைச் சீரழிக்கும் எண்ணம்.
எனவே தான் எண்ணத்தைச் சீரமைத்துக் கொள்ள வேண்டும். நல்ல எண்ணங்களையே எண்ணுதல் வேண்டும். தீய எண்ணங்களைத் தவிர்க்க முயல வேண்டும்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
வேதாத்திரிய சிந்தனைகள் : - அகத்தவ பெருமை : -
Vallal Ramamurthy posted in VMSKY.
Vallal Ramamurthy 12:59am Mar 13 வேதாத்திரிய சிந்தனைகள் : - அகத்தவ பெருமை : -
அகத்தவத்தால் ஐம்புலனை அடக்கி அறிவறிந்திடலாம் ;
அகத்தவத்தால் அறுகுண ஆளுமைப் பேறடைந்திடலாம் ;
அகத்தவத்தால் இல்லறத்தை அன்பகமாய் ஆற்றிடலாம் ;
அகத்தவத்தால் அனைத்துயிர்கள் அருநட்பைப் பெற்றிடலாம்.
அகத்தவத்தால் வீடுணர்ந்து அமைதி பெற்று இன்புறலாம் ;
- - வேதாத்திரி மகரிஷி
அன்பர்களே, மனவளக் கலையில் சொல்லிக்கொடுக்கும்
குண்டலினி தவம் பயின்று தொடர்ந்து பழகி வந்தால் ஐம்புலன்கள்
மனதின் கட்டுப்பாட்டில் வரும். ஆறு தீய குணங்களும் நம்மை
விட்டு விலகும் வல்லமை பெறலாம். குடும்பத்தில் அமைதியும்
மகிழ்ச்சியும் நிலைத்திருக்கும். எல்லா உயிர்களைய்ம் நேசிக்கும்
பண்பு வரும். அவைகளின் நட்பு கிடைக்கும். அனைத்திற்கும்
மேலாக பிறவியின் நோக்கமாகிய வீடுபேறு பெற்று இன்பமும்
அமைதியும் பெறலாம். தன்னை அறியலாம். தனது மூலம்
அறியலாம். வாழ்க வளமுடன்.
Monday, 12 March 2012
Kayakalpam Course (in Tamil) ON 18-03-2012
Dear Friends,
Vanakkam.Vazhga valamudan.
PLS FORWARD THIS MAIL TO YOUR FRIENDS & RELATIVES.
Welcome to our sky centre with your friends & Relatives for the kayakalpa course.
DATE & TIME:18 th March 2012 (Sunday ),1 PM to 4 PM (3 Hrs).
VENUE: VMSKY,53-A Woodsville Close, Potong pasir . SINGAPORE.
COURSE MEDIUM: Tamil
KAYA KALPA COURSE – THE ART OF LIVING GIVEN BY SIDHDHAS
The term KAYA means "body" and KALPA means "immortal". "KAYA KALPA" is a wonderful technique of the SIDDHAS of South India and has a threefold objective.
1. Withstanding the ageing process.
2. Maintaining youthfulness and physical health.
3. Postponing death
Benefits of Kaya Kalpa Practice:-
a. Nerves systems will become strengthen.
b. Can prevent from diseases like Asthma, sighness, diabetis, skin diseases.
c. For ladies Menses problems will be solved. Menopause problems will be solved.
d. Sexual vital fluid becomes thickened and the stock is increased so that the life force and bio-magnetism are sufficiently maintained in the body. It strengthens and rejuvenates the body. It will help to cure and prevent diseases and relieve the practitioner of the troubles of old age. "Sexual Potency" is enhanced but craving is brought within control.
e. Kaya Kalpa practice improves character and personality. There will be genetic improvement for healthier and more intelligent progeny.
f. Conception can be controlled at will when either of the partners has become successful in the practice over a sufficient period of time.
Kaya Kalpa is a precious gift to mankind. This practice helps one to maintain physical and mental health, further spiritual development and rejuvenates the physical system to withstand the ageing process. The practice will help all people regardless of sex, race, religion or creed, to enjoy a happy and satisfactory life.
Thousands of people have benefited. Why not you too?.
எண்ணங்கள்
பற்று, பாசம் இவைகளின் மூலமாக அதிகமான எண்ணங்களை இரவு பகலாக நாம் எண்ணிக் கொண்டே இருக்கிறோம். ஒவ்வொரு எண்ணத்திற்கும் சில செல்கள் இயங்க ஆரம்பிக்கும். நமக்குத் தூக்கம் வரக்கூடிய நேரத்திலும் நாம் இயக்கிவிட்ட எண்ண ஓட்டம் நிற்காமல் தொடர்ந்து ஓடிக் கொண்டேயிருக்கும். இதனால் தூக்கமும் வராது. சீவகாந்த சக்தி அதிகம் செலவாகி உடல்நலம் குன்ற வாய்ப்பு ஏற்படும். அதிகமாக எண்ணி எண்ணி மூளையிலுள்ள செல்களுக்கு அதிக வேலை கெடுத்து விட்டால் உடலுக்கு ஓர் இறுக்கம் வந்து விடும். அதைச் சரிப்படுத்த அதற்கென தியானப் பயிற்சி செய்தாக வேண்டும்.
கோபம், வெறுப்பு, சாபம், வஞ்சம் போன்ற எண்ணங்கள் மனதில் இருந்தால் நம்முடைய உடல்நலமும் மனநலமும்
பாதிக்கப்படும். அன்பு, பண்பு, இனிமை, வாழ்த்து இவைகளெல்லாம் ஒரு மனிதனுக்கு வேண்டிய நல்ல எண்ணங்கள்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
எதிர்வரும் 18/03/2012 ஞாயிறு மதியம் 1 மணி முதல் 4...
Uma Shankar posted in VMSKY.
Uma Shankar எதிர்வரும் 18/03/2012 ஞாயிறு மதியம் 1 மணி முதல் 4 மணி வரை vmsky singapore மன்றத்தில் நடைபெறும் காயகல்ப பயிற்சியில் கலந்து கொள்ள அன்பர்களே வாரீர்! வாழ்க வளமுடன்!
Sunday, 11 March 2012
ஆன்மீக அளவுகோல்
எடுக்கும் நற்காரியங்களிலெல்லாம் வெற்றியும், வெற்றியே வராவிட்டாலும், சலனமின்றி அமைதியாக இருக்கும் மனமும், பிறருக்கு உதவிக்கொண்டே இருக்கும் ஆர்வமும், ஆற்றலும் எந்த அளவுக்கு நமக்கு அமைந்துள்ளன என்பதைக் கொண்டு நமது ஆன்மீக மேம்பாட்டை ஒரு வகையில், ஓர் அளவில் கணக்கிடலாம்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -




